‘விஜய் சேதுபதியை எல்லாரும் நல்லா திட்டுங்க’ - நடிகை குஷ்பூ பரபரப்பு பேச்சு..!
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்கள் தற்போது படம் பார்த்துவிட்டு இணையத்தில் விமர்சனங்களையும், பாராட்டுகளையும் அள்ளிக் குவித்து வருகின்றனர்.
மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை தொடர்ந்து தற்போது விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார் கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ்.
மேலும் கடைசி நேர ட்விஸ்ட்டாக இப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்தார். இந்த படம் ஜூன் 3-ம் தேதியான நேற்று வெளியான நிலையில்,
நான்கு வருடங்களுக்கு பிறகு வெளியாகும் கமல் படம் என்பதால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்தனர்.
அந்த வகையில், விக்ரம் படத்தின் முதல்நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்களின் விமர்சனங்கள் இணையத்தில் கலைகட்டி வருகிறது.
விக்ரம் படம் வேற லெவலில் ஆக்ஷனில் மிரட்டியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஹாலிவுட் தரத்தில் ஒவ்வொரு காட்சியையும் லோகேஷ் மிரட்டியுள்ளதாகவும்,
நடிப்பில் அனைவருமே மிரட்டியுள்ளதாகவும் இண்டர்வெல் சீனில் மிகப்பெரிய ஹைப் கொடுத்துள்ளதாகவும் ரசிகர்கள் இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
மேலும் அனிருத் பின்னணி இசையில் தெறிக்கவிட்டுள்ளதாகவும், கண்டிப்பாக இந்தப்படம் லோகேஷின் ஃபேன் பாய் சம்பவம் என்றும் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் திரைத்துறையில் நடிகர் கமல் ஹாசனின் தீவிர ரசிகையான நடிகை குஷ்பூ தற்போது விக்ரம் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார்.
படத்தை குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படத்தை பார்த்துவிட்டு வீட்டுக்கு செல்கிறோம் என்ற திருப்தி கிடைத்திருக்கிறது.
உலகநாயகன் தனது நடிப்பால் அசத்தியுள்ளார். உலகின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார் என கமலின் நடிப்பை குறித்து குஷ்பூ பேசினார்.
மேலும், விஜய் சேதுபதி வில்லன் கதாப்பாத்திரத்தில் அசத்தியிருப்பதாகவும், ஃபஹத் ஃபாசில் தனது இயற்கையான நடிப்பில் கலக்கி இருப்பதாகவும் கூறிய குஷ்பூ,
அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு கிடைத்த பிளஸ் என்றும் முழுக்க முழுக்க இது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் மகத்தான உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்பதை குறிக்கும் விதமாக ஐசிங் ஆன் தி டாப் என தெரிவித்தார்.
இறுதியாக கமல் சார்-ஐ ரசிச்சு பாருங்க, விஜய் சேதுபதியை நல்லா திட்டுங்க, ஃபஹத் ஃபாசிலுக்கு ஃப்ளையிங் கிஸ் குடுங்க என படத்தை குறித்து ஒரே வாக்கியத்தில் சொல்லி முடித்தார் நடிகை குஷ்பூ.
You May Like This