விபத்தில் சிக்கினாரா குஷ்பூ...? - காலில் கட்டுடன் வெளியான புகைப்படம் - ஷாக்கான ரசிகர்கள்..!
காலில் கட்டுடன் தற்போது நடிகை குஷ்பூவின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை குஷ்பூ
தமிழ் சினிமாவின் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிப் படங்களிலும் நடித்து முன்னனி நடிகையாக உச்சம் பெற்றார் குஷ்பூ.
இவர் ரஜினி, கமல், சத்யராஜ், கார்த்திக், பிரபு போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்கள் மத்தியில் இன்று வரை நீங்கா இடம் பிடித்து வருகிறார். எந்த நடிகைக்கும் அமையாத அளவுக்கு நடிகை குஷ்புவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.
குஷ்பூவிற்கு கோயில் கட்டும் அளவிற்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் ஏராளம். நடிகை குஷ்பூ, இயக்குனர் சுந்தர்.சி யை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார். 2 மகள்கள் உள்ளனர். சமீபத்தில் குஷ்பூவின் தனது 2வது மகள் அனந்திதாவின் 20வது பிறந்த நாள் நேற்று கொண்டாடினார்.
விபத்தில் சிக்கினாரா குஷ்பூ? - வைரலாகும் புகைப்படம்
இந்நிலையில், நடிகை குஷ்பூ தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், உங்கள் அன்றாட வழக்கத்தை சீர்குலைத்து, ஒரு விசித்திரமான விபத்து உங்களை வலியில் ஆழ்த்தும் போது, ஒருவர் என்ன செய்வார்? மற்றவர்களைப் பற்றி எனக்கு தெரியாது, ஆனால் எனது பயணம் நிற்காமல் தொடரும், சாதிக்கும்வரை நிறுத்தமாட்டேன்.
அடுத்ததாக கோயம்புத்தூர், புதுடெல்லி, ஹைதராபாத், துபாய் ஆகிய இடங்களுக்கு செல்ல உள்ளேன். தன்னுடைய முழங்கால் வலியோடு அதற்கான வலி நிவாரணியும் எடுத்து வருகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் இந்த வலி சீக்கிரம் சரியாகிவிடும் என்று ஆறுதல் கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.