எடையை குறைத்தது எப்படி - ரகசியத்தை வெளியிட்ட நடிகை குஷ்பு!
தனது உடல் எடையை எப்படி குறைத்தேன் என்ற ரகசியத்தை நடிகை குஷ்பு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தன்னுடைய உடல் எடையை குறைத்து, இளம் நடிகை போல் ஜொலிக்கும் நடிகை குஷ்புவிடம், ரசிகர்கள் பலரும் உங்கள் எடையை எப்படி குறைதீர்கள் என்கிற ரகசியத்தை சொல்லுங்கள் என, தொடர்ந்து கேட்டு வந்த நிலையில், இந்த ரகசியத்தை தெரிவிக்கும் விதமாக இவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
80 மற்றும் 90 களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த குஷ்புவுக்கு தற்போது வரை ஏராளமான ரசிகர் உள்ளனர். திருமணத்திற்கு பின்னரும், பல படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்தார்.
அதே போல் சின்னத்திரையிலும், சீரியல் நடிகை, தொகுப்பாளினி, நடன நிகழ்ச்சி நடுவர் என ஒரு கலக்கு கலக்கினார். இப்போது ரசிகர்கள் அனைவரும் ஆச்சர்யப்படும் படியாக தன்னுடைய எடையை சரமாரியாக குறைத்து, அழகிய மாடலாக உருவெடுத்துள்ளார்.
இவரது இந்த அதிரடி மாற்றம் எப்படி நடந்தது, இவர் எப்படி தன்னுடைய எடையை குறைத்தார் என, தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது முதல் முறையாக அந்த ரகசியத்தை வெளிப்படுத்தும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குஷ்பு நடை பயிற்சி செய்யும் இந்த வீடியோவில், நடை பயிற்சி செய்வதால் உடல் நிலை நன்றாக இருக்கும், தொடர்ந்து நடந்தால் உங்களுடைய எடையும் குறையும் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.