திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குஷ்பு - என்னாச்சு?

Only Kollywood Indian Actress Kushboo
By Sumathi Oct 05, 2022 03:30 PM GMT
Report

நடிகை குஷ்பூ தண்டுவட அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை குஷ்பூ

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை குஷ்பூ. இவர் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடிப்பது மட்டுமின்றி அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். தனது உடல் எடையை குறைத்து திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குஷ்பு - என்னாச்சு? | Actress Kushboo Admitted In Hospital

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்களை சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார். தனக்கு (coccyx bone) முதுகு தண்டு வடத்தில் வலி ஏற்பட்டதால்,

மருத்துவமனையில் அனுமதி

சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறேன். 2நாட்கள் ஓய்வுக்குப் பின் வீடு திரும்ப இருக்கிறேன், முழு ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள்.

இரண்டு நாட்களுக்குப் பின் வழக்கமான பணிகளை தொடர்வேன் என்று சொல்லி ஆயுத பூஜை வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். அவர் உடல் நலம் பெற வேண்டி பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.