பிஎஸ்பிபி பள்ளி விவகாரம்... கடுமையான நடவடிக்கை எடுக்க நடிகை குஷ்பு வலியுறுத்தல்...
பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார் அதிர்ச்சி அளிப்பதாக நடிகை குஷ்பு டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சென்னை பிஎஸ்பிபி பள்ளியில் பயிலும் மாணவிகளை ஆசிரியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்வதாக சமூக வலைத்தளங்களில் புகார் எழுந்தது.
இந்த சம்பவம் குறித்து கனிமொழி எம்பி, தயாநிதி மாறன் எம்பி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாடகி சின்மயி உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நடிகை குஷ்புவும் இந்த சம்பவம் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், பிஎஸ்பிபி பள்ளி விவகாரத்தில் ஆசிரியர்களை நீக்கம் செய்வது உதவாது என்றும், உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.