ரஜினியுடன் 26 வருடங்களுக்கு முன்பே நடித்துவிட்ட பெரியாத்தா - உண்மையை வெளியிட்ட ரசிகர்கள்
அண்ணாத்த படத்தில் திருப்புமுனை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை லீலா இதற்கு முன் ரஜினியின் ஒரு படத்தில் தோன்றியுள்ளார்.
நடிகர்கள் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் ஆகியோர் நடிப்பில் சிவா இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான படம் அண்ணாத்த. டி.இமான் இசையமைத்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இப்படத்தில் பெரியாத்தா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர் குலப்புல்லி லீலா நடித்துள்ளார். கதையின் திருப்புமுனைக்கு இவர் தான் காரணமாக வருவார். கேரளாவைச் சேர்ந்த இவர் பல்வேறு மலையாளப் படங்களில் நடித்துள்ளதோடு நடிகர் விஷால் நடித்த மருது படத்தில் அவரின் பாட்டியாக நடித்து கவனம் ஈர்த்தார்.
தற்போது அண்ணாத்த படத்தில் நடித்துள்ள இவர், 26 வருடங்களுக்கு முன்பாக ரஜினி, மீனா நடித்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய முத்து படத்திலும் ஒரு காட்சியில் நடித்துள்ளார். அந்த காட்சியை மட்டும் எடுத்து பலரும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.