இளம் தென்கொரிய நடிகை மரணம் - சோகத்தில் ரசிகர்கள்

actresskimmisoo
By Petchi Avudaiappan Jan 07, 2022 06:26 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

தென்கொரியாவின் நடிகை கிம் மி-சூ தனது 29 வது வயதில் மரணமடைந்துள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

டிஸ்னி+ தொடரான ​​"ஸ்னோ டிராப்" மற்றும் நெட்பிக்ஸ் இன் "ஹெல்பாண்ட்" ஆகியவற்றில் துணை நடிகை கேரக்டரில் நடித்த தென் கொரிய நடிகை கிம் மி-சூ ரசிகர்களிடையே பிரபலமானார். 

வளர்ந்து வரும் மாடலும்,தொலைக்காட்சி நட்சத்திரமான கிம் மி-சூ- ஜனவரி 5 ஆம் தேதி திடீரென மரணமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அவரது ஏஜென்சியான லேண்ட்ஸ்கேப் என்டர்டெயின்மென்ட் தெரிவித்துள்ளது. அவரது இறப்புக்கான காரணம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த திடீர் செய்தியால் அவரது குடும்பம் தற்போது மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. 

இந்நிலையில், அவர் மரணம் குறித்து சமூக வளைதலங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வருவதால் இத்தகைய செயலை தவிர்க்குமாறு அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.