நடிகை குஷ்புவுக்கு என்னாச்சு ? - திடீரென மருத்துவமனையில் அனுமதி

Kushboo
By Irumporai Apr 07, 2023 09:00 AM GMT
Report

பாஜகவின் முக்கிய நிரவாகியும் நடிகையுமான குஷ்பு காய்ச்சல் காரணமாக ஹைத்ராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 குஷ்பு காய்ச்சல்

பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினராக நடிகை குஷ்பு பணியாற்றி வந்தார் , தற்போது குஷ்புவுக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நடிகை குஷ்புவுக்கு என்னாச்சு ? - திடீரென மருத்துவமனையில் அனுமதி | Actress Khushbu Suddenly Admitted To The Hospital

இதுகுறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்களை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியீட்டுள்ள குஷ்பு அதில் கடும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் இருக்கிறேன். அது என்னைப் பாதித்துவிட்டது. அதிக காய்ச்சல், உடல் வலி மற்றும் பலவீனம் ஆகியவற்றைக் கொன்றது.

மருத்துவமனையில் அனுமதி

உடலில் ஏற்படும் அறிகுறிகளைச் சற்று உன்னிப்பாகக் கவனியுங்கள், அதனைப் புறந்தள்ளி விடாதீர்கள். நான் கவனிக்காமல் விட்டதால் மட்டும் தான் எனக்கு இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது . விரைவில் குணமடைவேன் என நம்புகிறேன். பாதுகாப்பாக இருங்கள் என ட்விட் செய்துள்ளார்.