திடீரென உடல் எடை குறைத்த குஷ்பு.. கம் பேக்கா? வெளியான உண்மை தகவல்!

Mohan Only Kollywood Indian Actress Kushboo
By Sumathi 2 மாதங்கள் முன்

நடிகை குஷ்பு உடல் எடை குறைத்ததற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகை குஷ்பு

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. தற்போது சீரியல், தயாரிப்பு, அரசியல், குடும்பம் என பிசியாக இருந்து வருகிறார். சமீபத்தில், அவர் திடீரென உடல் எடை குறைந்து ஸ்லிம்மாக தோற்றமளித்தது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

திடீரென உடல் எடை குறைத்த குஷ்பு.. கம் பேக்கா? வெளியான உண்மை தகவல்! | Actress Khushbu Lost Her Weight For Actor Mohan

தொடர்ந்து அதுகுறித்து பகிர்ந்த குஷ்பு, இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என பலரும் என்னிடம் கேட்கிறீர்கள். இதற்கு லாக் டவுன் தான் காரணம். 70 நாட்களாக யாரும் உதவிக்கு இல்லை.. வீட்டில் தனியாக அனைத்து வேலைகளையும் செய்து கொண்டு இருக்கிறேன்.

உடல் எடை குறைப்பு

வீட்டில் சுத்தம் செய்வது, தூசியை துடைப்பது, தரையை மாப் கொண்டு துடைப்பது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, தோட்ட வேலை செய்வது, மற்றும் டாய்லெட் கழுவுவது கூட. அதோடு உடற்பயிற்சியும் யோகாவும் செய்தது உடல் எடையை குறைக்க அதிகம் உதவியது.

திடீரென உடல் எடை குறைத்த குஷ்பு.. கம் பேக்கா? வெளியான உண்மை தகவல்! | Actress Khushbu Lost Her Weight For Actor Mohan

அது மட்டுமின்றி நான் அதிகம் சாப்பிடும் ஆள் இல்லை என தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் உடல் எடை குறைக்க என்ன காரணம் என்பது தெரிய வந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் மோகன் ‘ஹரா’ படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க உள்ளார்.

கம்பேக் 

இதில் நடிகர் மோகனுக்கு ஜோடியாக நடிக்கிறார் குஷ்பு. நடிகர் மோகன் தற்போது தன்னுடைய கம்பேக்கிற்காக உடலை ஃபிட்டாக வைத்திருக்க அவருக்கு ஜோடி எனும் போது உடல் எடை குறைத்தால் நன்றாக இருக்குமே எனக் கருதிய படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீ, குஷ்புவிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

குஷ்பு இதனை உடனே ஏற்று இவ்வளவு சீக்கிரத்தில் உடல் எடையைக் குறைத்துள்ளார்.