நடிகை குஷ்பூ திடீரென மருத்துவமனையில் அனுமதி - ரசிகர்கள் அதிர்ச்சி

Khushbu BJP
By Petchi Avudaiappan Apr 22, 2022 05:52 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

பிரபல நடிகை குஷ்பூ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

90களில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பு கடைசியாக நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து வரும் அவர் பாஜகவில் இணைந்து அரசியல் பணியாற்றியும் வருகிறார். எப்பொழுதும்  தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் குஷ்பூ அவ்வப்போது எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

 அந்த வகையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படத்தை குஷ்பூ பகிர்ந்துள்ளதை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற குழப்பம் ஏற்பட்ட நிலையில் வால் எலும்பு பகுதியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சிகிச்சைப் பெற்று வருவதாக குஷ்பூ தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில் விரைவில் அவர் குணமடைய வேண்டும் என திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.