நடிகை சமந்தா விவாகரத்து: டென்ஷனில் நடிகை குஷ்பு போட்ட ட்வீட்

samantha nagachaitanya KhushbuSundar
By Petchi Avudaiappan Oct 02, 2021 04:43 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நட்சத்திர தம்பதி நாக சைதன்யா - சமந்தா விவாகரத்து குறித்து நடிகை குஷ்பு ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா  தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். 4 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களின் வாழ்வில் கடந்த சில மாதங்களாக ஏகப்பட்ட பிரச்சனைகள் நிகழ்ந்தன. 

இதனால் அவர்கள் இருவரும் விவாகரத்து பெறப்போவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் நடிகை சமந்தா, தனது கணவர் நாக சைதன்யாவை பிரியப்போவதாக அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று தெரிவித்தார். 

அந்த பதிவில் நீண்ட ஆலோசனைக்குக்குப் பிறகு கணவன் மனைவியாக உள்ள நானும் சமந்தாவும் பிரிந்து தனித்து செல்வதற்கு முடிவு செய்துள்ளோம். பத்துவருடங்களுக்கு மேலாக நண்பர்களாக இருப்பதற்கு எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த கடினமான நேரத்தில் நண்பர்கள், நலம் விரும்பிகள், ஊடகங்கள் உறுதுணையாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார். 

இதனிடையே நடிகை குஷ்பு நாக சைதன்யா - சமந்தா விவாகரத்து குறித்து ட்விட்டரில் பதிவு் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர்கள் இருவரும் பிரிந்ததற்கான உண்மையான காரணம் அவர்கள் இருவரையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஒரு ஜோடிக்கு இடையே என்ன நடக்கிறது, அவர்களுக்கு இடையே உள்ளது என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். அதனால், யூகத்தினால் என்ன நடந்திருக்கும் என்று ஆளாளுக்கு பேசுவதை நிறுத்துங்கள். இந்த அவர்களின் நிலைமையை புரிந்துகொண்டு அவர்களின் தனியுரிமையை மதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.