இளம் பெண்ணாக மாறிய நடிகை குஷ்பு - இணையத்தை கலக்கும் மாடர்ன் உடை புகைப்படங்கள்
லண்டன் சென்றுள்ள நடிகை குஷ்புவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகிகளில் ஒருவரான நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்து அரசியல் பணியாற்றி வருகிறார். அதேசமயம் நடிப்பு, தயாரிப்பு என சினிமாவுடனான அவரது பந்தமும் தலைமுறைகளை தாண்டி தொடர்கிறது. தற்போது கூட பல வருடங்களுக்குப் பின் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தில் முக்கிய கேரக்டரில் குஷ்பு நடித்துள்ளார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர்.சி-ஐ குஷ்பு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதனிடையே 51 வயதான நிலையில் கடந்த மாதம் தனது உடல் எடையை குறைத்து சினிமாவில் அறிமுகமான போது எப்படி இருந்தாரோ அந்த தோற்றத்திற்கு மாறி அனைவரையும் அசர வைத்தார். என்னதான் சினிமா, அரசியல் என இருந்தாலும் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதையும் தவிர்க்காமல் செய்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை குஷ்பு ஷூட்டிங்கிலிருந்து ஓய்வெடுத்து லண்டனை சுற்றிப்பார்க்க சென்றுள்ளார். அங்கு மாடர்ன் உடையில் 16வயது பெண் போல் லண்டனை சுற்றி வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.