கீர்த்தி சுரேஷ் குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வரும் அடுத்த நபர் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்
நடிகை கீர்த்தி சுரேஷின் அக்கா சினிமாத்துறையில் அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மகாநடி’யில் நடித்து, இளம் வயதிலேயே தேசிய விருதை பெற்றார். சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு தங்கையாக நடித்த அண்ணாத்த படம் வெளியாகி கீர்த்தியின் நடிப்பு பாராட்டைப் பெற்றது.
கீர்த்தியின் குடும்பமே சினிமா பின்புலத்தைச் சேர்ந்தவர்கள். கீர்த்தியின் அப்பா பிரபல மலையாள பட தயாரிப்பாளர், அம்மா மேனகா மம்முட்டி, ரஜினிகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது கீர்த்தி சுரேஷூம் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் அக்கா ரேவதியும் தற்போது சினிமாவில் கால் பதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் அவர் ஹீரோயினாக இல்லாமல், தயாரிப்பாளராக அறிமுகமாகவுள்ளார். தன்னுடைய அப்பா சுரேஷ் நடத்திவரும் தயாரிப்பு நிறுவனமான "கலாமந்திர்" தயாரிப்பு நிறுவனத்தின் புதிய படமொன்றை ரேவதி தயாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
"வாஷி" எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும், நடிகை கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.