அவர்கூட அதுக்கு ஈஸி தான்; அனால் விஜய் கூட ரொம்ப கஷ்டம் - நடிகை கீர்த்தி சுரேஷ் பளீச்!
நடிகர் விஜய்யுடன் நடனமாடுவது குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளார்.
கீர்த்தி சுரேஷ்
'இது என்ன மாயம்' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சீம ராஜா, சர்க்கார், அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 'நடிகையர் திலகம்' படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் சாவித்ரியாக வாழ்ந்து அனைவரையும் கவர்ந்தார் கீர்த்தி சுரேஷ். மேலும், இவர் நடிப்பில் வெளியான 'மாமன்னன்' திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.
கடினமான விஷயம்
கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சைரன் படத்தில் நடித்திருந்தார். நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷிடம், தனுஷுடன் நடிப்பது கடினமா..? அல்லது நடிகர் விஜய்யுடன் நடனமாடுவது கடினமா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர் "தனுஷ் உடன் நான் நடித்து விட்டேன்.. ஆனால் விஜய்யுடன் நடனமாடினேனா என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும். அவருக்கு இணையாக நடனம் ஆடுவது என்பது கடினமான விஷயம்" என்று தெரிவித்துள்ளார்.
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil