‘’ பாதுகாப்பாதான் இருந்தேன் ஆனா வந்துட்டு ‘’ - நடிகை கீர்த்தி சுரேஷிற்கு கொரோனா தொற்று
நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தோற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், திரையுலக பிரபலங்கள் சிலர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டாலும் தற்போது எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
— Keerthy Suresh (@KeerthyOfficial) January 11, 2022
அனைவரும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள். நான் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளேன். என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தயவுசெய்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் இன்னும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை என்றால், உங்கள் மற்றும் உங்கள் அன்புக்குரியவர்கள் சிறந்த ஆரோக்கியத்திற்காக தயவு செய்து உங்கள் விரைவாக தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள். விரைவில் குணமடைந்து மீண்டும் வருவேன் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.