நடிகை கயல் ஆனந்தி கர்ப்பம் - மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்

pregnant fans enjoy kayal anandhi
By Anupriyamkumaresan Aug 16, 2021 10:10 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

பிரபல நடிகையான கயல் ஆனந்தி கர்ப்பமாக இருப்பதாகவும், விரைவில் வளைகாப்பு நடக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஆனந்தி.

கடந்த 2014ம் ஆண்டு வெளியான ‘பொறியாளன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதே ஆண்டில் வெளியான ‘கயல்’ படத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல அறிமுகத்தை பெற்றார்.

நடிகை கயல் ஆனந்தி கர்ப்பம் - மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள் | Actress Kayal Anandhi Pregnant Fans Enjoy

இந்த படத்திற்கு பிறகு கயல் ஆனந்தி என பெயர் மாற்றம் பெற்றார். தனது சிறந்த நடிப்பால் அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து விசாரணை, சண்டி வீரன், த்ரிஷா இல்லனா நயன்தாரா, பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற படங்களில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

இதில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படம் நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது. கடைசியாக ராஜசேகர் துரைசாமி இயக்கத்தில் வெளியான “கமலி பிரம் நடுக்காவேரி” படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு பிறகு அவர் நடித்த அலாவுதீனின் அற்புத கேமரா, ராவணக் கூட்டம், தெலுங்கில், ஸோம்பி ரெட்டி ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

படங்களில் பிசியாக நடித்து வந்த கயல் ஆனந்தி, உதவி இயக்குனர் சாக்ரடீஸ் என்பவரை 4 வருடமாக காதலித்து தற்போது திருமணம் செய்துக்கொண்டார்.

நடிகை கயல் ஆனந்தி கர்ப்பம் - மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள் | Actress Kayal Anandhi Pregnant Fans Enjoy

திருமணத்திற்கு பிறகு கமிட்டான படங்களில் மட்டும் நடித்து கொடுத்தார். இந்நிலையில் கயல் ஆனந்தி கர்ப்பமாக இருப்பதாகவும், தற்போது 7 மாதம் நடைபெறுவதால் விரைவில் வளைகாப்பு நிகழ்ச்சி நடக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கயல் ஆனந்தி கர்ப்பமான செய்தியை கேட்டு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.