மகன் இறந்த 14 நாட்களிலேயே கணவனும் உயிரிழந்த கொடுமை! சோகத்தில் மூழ்கிய நடிகை கவிதா!
பிரபல நடிகை கவிதாவின் மகன் கொரோனா தொற்றால் உயிரிழந்து 14 நாட்கள் கழிந்த நிலையில் இன்று கணவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகை கவிதா. கொரோனாவில் இரண்டாம் அலையால் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர்.
ஏராளமான திரையுலகினருகும் மறைந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை கவிதாவின் மகன் சாய் ரூப் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதனை தொடர்ந்து கடந்த 14 நாட்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மகனை இழந்த நடிகை கவிதா சோகத்திலேயே மூழ்கி கிடந்துள்ளார்.
மகன் மறைந்து 14 நாட்களே ஆன நிலையில், தற்போது அவரது கணவரும் இன்று கொரோனா தொற்று பாதிப்பால் பரிதாபமாக உயிரிழந்தார். ஒரு வீட்டில் இரண்டு உயிர்களை இழந்து நடிகை கவிதா வேதனையில் உறைந்துள்ளார்.
இவருக்கு ஏராளமானோர் தங்களது ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.