விஜய் அப்படிப்பட்டவர்; அந்த விஷயத்தை அவரிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன் - நடிகை கௌசல்யா!
நடிகை கௌசல்யா தளபதி விஜய்யுடன் நடித்ததை பற்றி பேசியுள்ளார்.
நடிகை கௌசல்யா
90ஸ் களில் தமிழ் சினிமாவில் தனது கியூட்டான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை கௌசல்யா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என ஏறத்தாழ 30 படங்களில் நடித்துள்ளார். 1996ம் ஆண்டு வெளியான 'ஏப்ரல் ' என்ற மலையாள படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.
பின்னர் 'காலமெல்லாம் காதல் வாழ்க' என்ற படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். பூவேலி என்ற திரைபடத்தில் தனது சிறப்பான நடிப்பிற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார். விஜய், சூர்யா, பிரபுதேவா, கார்த்திக், பிரபு என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
தொலைக்காட்சி தொடர்களிலும் கௌசல்யா நடித்துள்ளார். தற்போது சினிமாவில் நடிக்காமல் இருக்கிறார் கௌசல்யா. அண்மையில் யூடியூப் சானெல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் நடிகர் விஜய்யை பற்றி பேசியுள்ளார் கௌசல்யா.
பேட்டி
அவர் பேசியதாவது "விஜய்யை நான் முதன் முதலில் நேருக்கு நேர் படத்தின் செட்டில் தான் பார்த்தேன். அவர் மிகவும் பணிவான ஒரு மனிதர். எனக்கு டயலாக் வராததினால் நான் நிறைய டேக் வாங்கினாலும், அவர் என்னை திட்டமாட்டார்.
சளித்துக் கொள்ளவும் மாட்டார். எனக்கு உதவி செய்யார் , இல்லையென்றால் அமைதியாக இருப்பார். ஒருமுறை நானும், விஜய்யும் டயலாக் பிராக்டீஸ் செய்து கொண்டிருந்தோம். விஜய் சத்தமாக டயலாக் சொல்லி ப்ராக்டீஸ் செய்வார். நான் மனசுக்குள்ளேயே சொல்லி ப்ராக்டீஸ் செய்வேன்.
அப்போது இயக்குநர் வசந்த சார் என்னிடம் சொன்னார் "விஜய்யை பார்த்து, அதே போல் பிராக்டீஸ் பண்ணுங்க, அப்போ உங்களுக்கு டயலாக் சரியாக வரும்" என்று சொன்னார். அவரைப்போல் ப்ராக்டீஸ் செய்த பிறகுதான் எனக்கு டயலாக் சரியாக வர ஆரம்பித்தது" என்று நடிகை கவுசல்யா பேசியுள்ளார்.