105Kg உடல் எடை அதிகரிப்புக்கு இதான் காரணம்..இப்படித்தான் குறைச்சேன் - கௌசல்யா பேட்டி!
தனது உடல் எடை அதிகரிப்பு குறித்து கௌசல்யா பேசியுள்ளார்.
நடிகை கௌசல்யா
90ஸ் களில் தமிழ் சினிமாவில் தனது கியூட்டான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை கௌசல்யா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என ஏறத்தாழ 30 படங்களில் நடித்துள்ளார். 1996ம் ஆண்டு வெளியான 'ஏப்ரல் ' என்ற மலையாள படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.
பின்னர் 'காலமெல்லாம் காதல் வாழ்க' என்ற படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். பூவேலி என்ற திரைபடத்தில் தனது சிறப்பான நடிப்பிற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார். விஜய், சூர்யா, பிரபுதேவா, கார்த்திக், பிரபு என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் கௌசல்யா நடித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்ததால் சினிமாவை விட்டு விலகியிருந்தார் கௌசல்யா. அப்போது இவரின் உடல் எடை அதிகப்படியாக அதிகரித்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது. அண்மையில் கௌசல்யா பிரபல யூடியூப் சானெல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் தனது உடல் எடை அதிகரிப்பு குறித்து கௌசல்யா பேசியுள்ளார்.
பேட்டி
அவர் பேசுகையில் எனக்கு அதிக பசி எடுக்க ஆரம்பித்ததால், நான் உணவுகளை அதிகமாக சாப்பிட ஆரம்பித்தேன்., குளுக்கோஸ் நீர் அதிகமாக குடித்தேன். அதுமட்டுமல்லாமல் அதிகப்படியாக உடற்பயிற்சி செய்தேன்.
அதனால்தான் எனது உடல் எடை 105 Kg ஆகா கூடியது என்று நான் நினைக்கிறேன். நான் இதைப்பற்றி மருத்துவர்களிடம் கேட்டபோதும், அவர்கள் என்னிடம் சரியான பதில் சொல்லவில்லை. பிறகு நான் உடல் எடையை எப்படி குறைத்தேன் என்றால் "பசியை கட்டுப்படுத்த ஹோமியோபதி மருந்து எடுத்துக்கொண்டேன்.
அதன் பிறகு சிறிது உடற்பயிற்சி செய்தேன். மேலும், உணவுகள் சாப்பிடுவதை குறைத்துக்கொண்டேன். அதனால் தானாகவே எனது உடல் எடை ஒரு வருடத்தில் குறைந்தது. இப்போது எனது உடல் எடை 70Kg ஆக உள்ளது " என்று கவுசல்யா பேட்டியளித்துள்ளார்.