அது எப்போ தேவையோ அப்போ கல்யாணம் பண்ணிப்பேன் - வெளிப்படையாக பேசிய கெளசல்யா!
தனது திருமணம் குறித்து நடிகை கெளசல்யா பேசியுள்ளார்.
நடிகை கெளசல்யா
தமிழில் காலமெல்லாம் காதல் வாழ்க என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கெளசல்யா.

நடிகர் விஜய்யுடன் நேருக்கு நேர், ப்ரியமுடன், விஜயகாந்துடன் வானத்தை போல படங்களில் அவர் அடுத்தடுத்து நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தார்.தமிழ் மற்றும் மலையாளத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
43 வயதாகியும் தற்போது வரை திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார். சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து சினிமாவை விட்டு விலகி இருந்த இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நடித்து அசத்தி வருகிறார்.
திருமணம்?
இந்நிலையில் இதுகுறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், நான் திருமணத்தை எதிர்ப்பவள் இல்லை, என்னுடைய கருத்துக்கு ஏற்ப பிடித்தமான ஒருவரை இன்னும் நான் சந்திக்கவில்லை.

இந்த விஷயம் இப்போ எனக்கு தேவை என்று படவில்லை. என் வாழ்க்கை இப்படியே போகட்டும். தனக்கு எப்போது பாதுகாப்பு வேணும் என்று நினைக்கிறேனோ? அப்ப கல்யாணம் பத்தி யோசிப்பதோடு நின்று விடாமல் திருமணமும் செய்து கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார்.
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil
தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil