ராஷ்மிகாவைத் தொடர்ந்து பிரபல நடிகைக்கு நேர்ந்த கொடூரம் - வைரலாகும் ஃபோட்டோஸ்!
நடிகை கத்ரீனா கைஃபின் போலி வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
கத்ரீனா கைஃப்
நடிகை ராஷ்மிகாவின் முகத்தை வேறொரு பெண்ணின் வீடியோவில் மார்பிங் செய்து வெளியிட்டனர். அந்த பெண் ஆபாச உடை அணிந்திருந்தார்.
அந்த வீடியோவை மார்பிங் செய்த பின் அது நிஜமாகவே ராஷ்மிகா போல இருந்ததால் பலரும் அதை உண்மை என நம்பிவிட்டனர். இதனால் வேதனையடைந்த ராஷ்மிகா கடும் கண்டனம் தெரிவித்து, நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார்.
சர்ச்சை புகைப்படம்
இந்நிலையில், நடிகை கத்ரீனா கைஃப் இந்த வீடியோ சர்ச்சையில் சிக்கியுள்ளார். டைகர் 3 படத்தில் டவல் அணிந்து ஒரு சீனில் நடித்துள்ளார். அந்த சீனை AI மூலம் ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், இனி போலி வீடியோக்களை வெளியிட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.