Saturday, Jun 28, 2025

CSK அணியுடன் இணையும் பிரபல நடிகை - அப்போ கண்டிப்பாக அதை எதிர்பார்க்கலாம்!

MS Dhoni Chennai Super Kings Cricket Katrina Kaif IPL 2024
By Jiyath a year ago
Report

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பர தூதராக பாலிவுட் நடை கத்ரினா கைஃப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிஎஸ்கே அணி 

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. தற்போது வீரர்களுக்கான பயிற்சி முகாம், விளம்பர ஒப்பந்தங்கள்,ஜெர்சி அறிமுகம் உள்ளிட்டவை குறித்து அணி நிர்வாகங்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

CSK அணியுடன் இணையும் பிரபல நடிகை - அப்போ கண்டிப்பாக அதை எதிர்பார்க்கலாம்! | Actress Katrina Kaif Brand Ambassador Of Csk

அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்ஸி சில நாட்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிஎஸ்கே வீரர்களான தீபக் சஹர், முகேஷ் சவுத்ரி, ஹங்கர்கேகர், சிமர்ஜித் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உலக சாதனை படைத்த மாரத்தான் வீரர் விபத்தில் மரணம் - பெரும் சோகத்தில் மக்கள்!

உலக சாதனை படைத்த மாரத்தான் வீரர் விபத்தில் மரணம் - பெரும் சோகத்தில் மக்கள்!

விளம்பர தூதர் 

மேலும் அணியின் புதிய டைட்டில் ஸ்பான்சராக ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிகாரப்பூர்வ விமான நிறுவனமான 'எதிஹாட் ஏர்வேஸ்' நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

CSK அணியுடன் இணையும் பிரபல நடிகை - அப்போ கண்டிப்பாக அதை எதிர்பார்க்கலாம்! | Actress Katrina Kaif Brand Ambassador Of Csk

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பர தூதராக பாலிவுட் நடை கத்ரினா கைஃப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விளம்பர தூதராக கத்ரினா கைஃப் செயல்பட்டு வருகிறார். இதனால் சிஎஸ்கே அணி வீரர்கள் பங்கேற்கும் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவன விளம்பரங்களில் கத்ரினா கைஃபும் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.