உதயநிதி ஸ்டாலின் கதறுவதை 5 வருடத்துக்கு பார்க்கலாம் - நடிகை கஸ்தூரி பேச்சால் சர்ச்சை
நடிகை கஸ்தூரி, தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி முறை குறித்துத் தெரிவித்துள்ள கருத்துக்கள் இணையத்தில் பெரும் சர்ச்சசையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியல் களம் தற்போது மிகுந்த பரபரப்புடன் இயங்கி வருகிறது. தவெக விஜய் முதல்வராக பதிவியேற்றத்தில் இருந்து அரசியல் களம் நாள்தோறும் அதிரடியான மாற்றங்களுடன் பட்டையை கிளப்பி வருகின்றது.

இந்நிலையில் முதல்வர் விஜய்க்கு ஆதரவாக ஒலிக்கும் குரல்களுக்கு நிகராக எதிர்ப்புக் குரல்களும் இருந்து வருகின்றது.
இந்நிலையில் நடிகை நடிகை கஸ்தூரி விஜய்யின் அரசை பாராட்டி பேசியுள்ள விடயங்கள் தற்போது கவனம் பெற்றுள்ளது.
நடிகை கஸ்தூரி பேட்டி
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கஸ்தூரி, "தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி முறையை தி.மு.க. விமர்சிக்கிறது என்றால், முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகள் சரியான பாதையில் செல்கின்றன என்பதற்கான ஓர் அறிகுறியாகவே நான் பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில், மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ள தி.மு.க.வினர் தங்களின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவும், கவனத்தை ஈர்க்கவும் தொடர்ந்து கத்திக்கொண்டேதான் இருப்பார்கள்.
டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை..குடிபோதையில் இருப்பவர்கள் பொது இடங்களை, குறிப்பாக சாலைகளைக்கூட பார்களாக மாற்றும் அவலநிலை தொடர்வது வேதனை அளிக்கிறது.
இத்தகைய சமூகச் சீர்கேடுகளைத் தடுக்க அரசு எடுக்கும் முடிவுகள் அவசியம். பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் வசூலிக்கும் முறை இன்னமும் மாறாமல் இருப்பது, அடிமட்ட அதிகாரிகள் நிலையில் உள்ள மாற்றமின்மையையே காட்டுகிறது. இது போன்ற நிர்வாகக் கட்டமைப்பில் உள்ள சிக்கல்கள் முதலமைச்சர் விஜய்க்கு முழுமையாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
புதியதாக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் பதவியேற்றுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய்க்கு மக்கள் தகுந்த கால அவகாசம் வழங்க வேண்டும்.. பலர் அரசியல் களத்திற்குப் புதியவர்கள் என்பதால், கற்றுக் கொள்வதற்கும் நிர்வாகத்தைச் சீரமைப்பதற்கும் உரிய கால அவகாசம் தேவை.மாற்றுக் கட்சிகளுக்குப் பலர் கட்சி மாறுவது தமிழக அரசியலில் புதிதல்ல.
அதிமுக ஆட்சிக் காலத்திலும்கூட இத்தகைய கட்சித் தாவல்கள் நடைபெற்றுள்ளன. மத்திய அரசுடன் முதலமைச்சர் விஜய் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பாரா என்று கேட்கிறீர்கள்.. கொள்கை ரீதியான முரண்பாடுகள் மட்டுமே அரசியலில் பிரதானமே தவிர, மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் கொள்கை முரண்பாடு இருக்க முடியாது.
மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பது கொள்கை என்றால், அதை முதலமைச்சர் விஜய் வேண்டாம் என்றா சொல்லப்போகிறார்? அதை எதிர்க்க போவதில்லையே" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
புதிய ஆட்சிக்கு மக்களின் பொறுமையும் ஆதரவும் தேவை என பல நல்ல கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
ஆனால், இன்னும் 5 வருடத்துக்கு திமுக கத்திட்டே இருக்க வேண்டியதுதான் என்று கஸ்தூரி திமுகவை விமர்ச்சிக்கும் வகையில் சில வார்த்தைகளை பேசியிருப்பது தான்தற்போது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.