பாஜக உறுப்பினரானார் நடிகை கஸ்தூரி - வரவேற்ற நயினார் நாகேந்திரன்!

Kasthuri Tamil nadu BJP
By Sumathi Aug 15, 2025 09:28 AM GMT
Report

சினிமா நடிகை கஸ்தூரி பாஜகவில் இணைந்துள்ளார்.

 நடிகை கஸ்தூரி

தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

acress kasthuri

அதிமுக மற்றும் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். திமுக அரசை கடுமையாக விமர்சித்து, குற்றம்சாட்டினார். இந்நிலையில் நடிகை கஸ்தூரி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.

பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் நடைபெற்ற விழாவில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் கஸ்தூரி இணைத்துக்கொண்டார். இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

என்.டி.ஏ கூட்டணியில் மீண்டும் இணைய ஓபிஎஸ்-க்கு அழைப்பு? நயினார் நாகேந்திரன் தகவல்!

என்.டி.ஏ கூட்டணியில் மீண்டும் இணைய ஓபிஎஸ்-க்கு அழைப்பு? நயினார் நாகேந்திரன் தகவல்!

பாஜக உறுப்பினர்

நடிகை கஸ்தூரி அவர்களும், நடிகையும், சமூக செயற்பாட்டாளரும், Namis South Queen India நிறுவனத்தின் தலைவருமான திருநங்கை நமிதா மாரிமுத்து அவர்களும் இன்று சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் பெப்சி சிவா அவர்களின் முன்னிலையில்,

பாஜக உறுப்பினரானார் நடிகை கஸ்தூரி - வரவேற்ற நயினார் நாகேந்திரன்! | Actress Kasthuri Joined The Tamil Nadu Bjp

பாஜகவில் இன்று இணைந்தனர். சமூக செயல்பாட்டாளரான கஸ்தூரி அவர்களும் நமீதா மாரிமுத்து அவர்களும் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக அரசியல் பயணத்தில் இணைந்திருப்பது வரவேற்கத்தக்கது. அவர்களுடைய அரசியல் பயணம் தமிழக பாஜகவில் தொடங்கி இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.