மார்பகம் குறித்து ஆபாச கமெண்ட்; அது அப்படி இருக்க காரணம் இதுதான் - நடிகை கனிகா வேதனை!
ஆபாசமான கமெண்டுகள் குறித்து நடிகை கனிகா பேசியுள்ளார்
நடிகை கனிகா
ஃபைவ் ஸ்டார் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கனிகா. தொடர்ந்து இதையடுத்து, எதிரி, ஆட்டோகிராப் போன்ற திரைப்படத்தில் நடித்தார். மேலும், நடிகர் அஜித்துடன் வரலாறு என்ற படத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

நடிப்பு மட்டுமல்லாமல் ஜெனிலியா, சதா, ஷ்ரேயா போன்ற நடிகைகளுக்கு பின்னணி குரலும் கனிகா கொடுத்துள்ளார். இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஷியாம் ராதாகிருஷ்ணன் எனபவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு ஒரு மகனும் உள்ளார். தற்போது எதிர் நீச்சல் என்ற தொடரில் கனிகா நடித்து வருகிறார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட கனிகா, ஆபாசமான கமெண்டுகள் குறித்து பேசியுள்ளார்.
வேதனை
அவர் பேசியதாவது "பெண்களின் மார்பகம் பற்றி சமுகவலைத்தளத்தில் படு மோசமாக கருத்துக்களை சிலர் பதிவிட்டு வருகின்றனர். எதற்காக இப்படியான கருத்துக்களை பதிவிடுகிறார் என்று எனக்கு புரியவில்லை.

உங்கள் வீட்டு பெண்களிடம் இருக்கக்கூடிய அதே விஷயம் தான் எனக்கும் இருக்கிறது. எனது மார்பகம் பெரிதாக இருக்க ஹார்மோன் மாற்றங்கள் தான் காரணம். திருமணமாகி கர்ப்பமான, குழந்தைக்கு பாலூட்டும் பெண்களுக்கு இப்படித்தான் இருக்கும். இது எனக்கு மட்டுமல்ல அனைத்து பெண்களுக்கும் அப்படித்தான்.
பெண்களுக்கு வம் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவதை போன்று எனக்கும் ஏற்பட்டு என் மார்பகமும் பெரிதாக இருக்கிறது. இதை, அருவருப்பான வார்த்தைகளால் மிகவும் மோசமான கருத்துக்களை பதிவிடுவதை பார்க்கும் போது, நீங்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்று யோசிக்க தோன்றுகிறது" என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
1500 நாட்கள் போராட்டம்: இன்னும் தீர்வின்றி தொடரும் மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர்களின் கோரிக்கை IBC Tamil