ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கங்கனா மரியாதை

memorial jayalalithaa kanganaranaut
By Irumporai Sep 04, 2021 05:39 AM GMT
Report

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் தலைவி. இந்த படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள நிலையில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார்.

இதில்  எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ளார் . மேலும் சமுத்திரகனி, மதுபாலா உள்ளிட்ட ஏராளமானோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் வரும் 10ம் தேதி கங்கனா ரணாவத் நடத்த தலைவி திரைப்படம் தியேட்டரில் வெளியாக உள்ள நிலையில் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கங்கனா ரணாவத் மரியாதை செலுத்தினார் .

திரையரங்குகளில் வெளியாகும் தலைவி திரைப்படம் இரண்டு வாரங்களில் ஓடிடியில் வெளியிடப்படும் என படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் தலைவி திரைப்படம் 4 வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்தது.

இதனால் எந்த பிரச்சனையும் இன்றி வருகின்ற செப்டம்பர் 10ஆம் தேதி தலைவி திரைப்படம் வெளியாக உள்ளது.