நடிகை கனகா வீட்டில் திடீரென தீ விபத்து - ஷாக்கான ரசிகர்கள்...!
நடிகை கனகா வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
நடிகை கனகா வீட்டில் தீ விபத்து -
பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகளும், நடிகையுமான கனகாவின் வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் 80, 90களில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்தனவர் நடிகை கனகா.
இவர் ரஜினி, கமல் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும், தமிழ் மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
தற்போது நடிகை கனகா, சென்னை ஆர்.ஏ.புரத்தில் தன் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், இன்று அவரது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக இந்த தீ விபத்து குறித்து போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசாரும், தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.