அவர் அவ்வளவு ஸ்பெஷல்; உங்களுக்கு நிரூப்பிக்கணும்னு அவசியம் இல்ல - நடிகை கல்யாணி!
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவு குறித்து நடிகை கல்யாணி பேசியுள்ளார்.
நடிகை கல்யாணி
தமிழ் சினிமாவில் சிறு வயது முதல் நடித்து பிரபலமானவர் தான் நடிகை கல்யாணி. இவர் சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஆண்டாள் அழகர்’, ‘பிரிவோம் சந்திப்போம்’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார்.
மேலும் பல மேடை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளியாகவும் பணிபுரிந்துள்ளார். இதனையடுத்து, சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு குடும்பம், குழந்தை என்று செட்டிலாகி விட்டார். இந்நிலையில் மறைந்த தேமுதி தலைவரும், நடிகருமான விஜயகாந்துடன் ரமணா படத்தில் கல்யாணி நடித்திருந்தார்.
ஆனால் அவர் உயிரிழந்த போது எதுவும் எதுவும் இருந்தது விமர்சனங்களை பெற்ற நிலையில், அதற்கு அவர் பதிலளித்துள்ளார் . இதுகுறித்து கல்யாணி பேசியதாவது "நிறைய பேர் என்னிடம், நீங்கள் விஜயகாந்த் சாருடன் இணைந்து ரமணா திரைப்படத்தில் நடித்திருக்கிறீர்கள்.
அப்படி இருக்கும் பொழுது ஏன் அவரது இறப்பு குறித்து பேசவில்லை, அவர் மீது உங்களுக்கு மரியாதை இல்லையா என்று கூறி பயங்கரமாக மெசேஜ் செய்து கொண்டிருந்தார்கள். உண்மையில் அவர் எவ்வளவு ஸ்பெஷல் என்பது எனக்கு தெரியும்.
விளக்கம்
அதை நான் உங்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. என்னுடைய முதல் கையெழுத்தை எப்படி எழுத வேண்டும் என்பதை அவர்தான் எனக்கு சொல்லிக் கொடுத்தார். அவர்தான் அதனை வடிவமைத்தார்.
ரமணா திரைப்படத்தில் அவர்தான் நான் நடிக்க வேண்டும் என்று சொல்லி என்னை அந்த படத்தில் கமிட் செய்தார். முதன்முறையாக நான் ரமணா படபிடிப்புக்கு சென்ற போது, விஜயகாந்தும் அவரது மனைவியான பிரேமலதாவும் என்னை கட்டிப்பிடித்துக் கொண்டு நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.
நான் பார்த்ததில் ஒரு ரியல் ஹீரோ விஜயகாந்த் சார் தான். அவர் கருணை உள்ளம் கொண்டவர் மட்டுமல்ல. அவர் மிகவும் அழகான மனிதர். பிறருக்கு சாப்பாடு கொடுப்பது என்றால் அவருக்கு அவ்வளவு சந்தோஷம். அவருக்கு எல்லோரும் சமமாக நடத்தப்பட வேண்டும்.
ஒரு மனிதராக அவர் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. அவருக்கு உண்மையிலேயே தங்க மனது. மனிதராக அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன. அவரது இறப்பு உண்மையிலேயே எனக்கு ஷாக்கிங் தான். அவர் இறந்து விட்டார் என்ற செய்தியை என்னால் இப்போதும் என்னால் நம்ப முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.