இந்தியில் பேசணுமா? கோபத்தில் கொந்தளித்த கஜோல் - வைரலாகும் வீடியோ!
இந்தியில் பேச மறுத்து, நடிகை கஜோல் அளித்த பதில் வைரலாகி வருகிறது.
கஜோல் மறுப்பு
மும்பையில் நடைபெற்ற மகாராஷ்டிரா மாநில திரைப்பட விருதுகள் விழாவில், இந்தியத் திரையுலகிற்கு அளித்த பங்களிப்புகளுக்காக கஜோலுக்கு மதிப்புமிக்க ராஜ்கபூர் விருது வழங்கப்பட்டது.
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கைகளால் இந்த விருதைப் பெற்ற காஜோல், மேடையில் மராத்தியில் பேசினார். இந்த விழா முடிவில் செய்தியாளர்களுடன் விருது குறித்து மராத்தியில் பேசியுள்ளார். அப்போது ஒரு செய்தியாளர்,
"அதை இந்தியில் மீண்டும் சொல்ல முடியுமா?" என்று கேட்டார். இதனால் கோபமான காஜோல், "இப்ப நான் இந்தில பேசணுமா? யாருக்குப் புரியணுமோ அவங்க புரிஞ்சுப்பாங்க!" என்று கோபமாக பதிலளித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ
இந்தி சினிமா மூலம் புகழடைந்த ஒரு நடிகை, மொழி குறித்த விவாதத்தில் இப்படி நடந்துகொண்டது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால் அவர் ஒரு இந்தித் திரைப்பட நடிகை என்பதால், இந்தியில் பேசுவது அவரது கடமை என்றும், நிருபரிடம் கோபப்பட்டது தேவையற்றது என்றும் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
हिंदी से ही इनको रोज़गार मिलता है,हिंदी से ही प्रसिद्धि मिली है,हिंदी का ही खाते हैं…और हिंदी में एक लाइन बोलने को कहा गया तो यह प्रतिक्रिया? इन लोगों की असलियत यही है#Kajol #Hindi #HindiVsMarathi
— Shilpi Sen (@senshilpi) August 7, 2025
pic.twitter.com/nJTutoJONM
அதேசமயம் அவர் ஆங்கிலம் மற்றும் மராத்தியில் பேசியது தவறில்லை என்றும், எந்த மொழியில் பேச வேண்டும் என்பது அவரது தனிப்பட்ட விருப்பம் என்றும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.