நடிகை காஜல் அகர்வால் கர்ப்பம் - ரசிகர்கள் உற்சாகம்
நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் காஜல் அகர்வால் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் காஜல் அகர்வால்.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் காஜல் அகர்வால் தொழிலதிபர் கவுதம் கிச்சுலுவைத் திருமணம் செய்து கொண்டார். நடிகைகள் பலர் திருமணத்திற்குப் பிறகு நடிப்பைக் கைவிட்டுவிடுவர்.
ஆனால் காஜல் அகர்வால் திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் படங்களில் நடிப்பதைக் குறைத்து கொண்டு கணவருடன் அதிக நேரம் செலவிட்டு வந்தார்.
தற்போது காஜல் கவுதம் ஜோடி பெற்றோர்கள் ஆக இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அது தற்போது உறுதியாகியுள்ளது. நடிகை காஜல் தற்போது சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் ஆச்சார்யா படத்தில் நடித்து வருகிறார்.
காஜல், ஆச்சார்யா படக்குழுவினரிடம், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் எனவே படத்தில் தனது பகுதிகளை விரைவில் முடித்துத் தரும் படி கேட்டுக்கொண்டதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் காஜல் - கௌதம் ஜோடி இதை அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை. காஜல் கர்ப்பமான செய்தி அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் தங்களின் பேவரைட் நடிகையை இனி திரையில் அடிக்கடி பார்க்க முடியாது என்ற போது சற்று வருத்தமும் ஏற்படத்தான் செய்யும்.