கே.ஜி.எப். இயக்குனரின் புதிய படத்தில் நடிகை ஜோதிகா?
Actress Jyothika
Director Prashanth neel
By Petchi Avudaiappan
கே.ஜி.எப். இயக்குனரின் புதிய படத்தில் நடிகை ஜோதிகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவர் விளக்கமளித்துள்ளார்.
கே.ஜி.எப் படத்தை இயக்கியதன் மூலம் இந்திய திரையுலகில் பிரபலமானவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக நடிகர் பிரபாஸை வைத்து ‘சலார்’ என்ற படத்தை இயக்க உள்ளார்.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.
இதனிடையே பிரபாஸுக்கு சகோதரியாக நடிகை ஜோதிகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் இதுபோன்ற அதிகாரப்பூர்வமற்ற தகவலை நம்ப வேண்டாம் என ஜோதிகா தெரிவித்துள்ளார்.