எங்க வீட்டில் அந்த ரூல் இருக்கு; தினமும் இப்படித்தான் நடக்குது - போட்டுடைத்த ஜோதிகா!

Jyothika Tamil Cinema Tamil Actors Tamil Actress Actress
By Jiyath May 26, 2024 10:09 AM GMT
Report

தங்கள் வீட்டைப் பற்றிய சுவாரஸ்ய விஷயம் ஒன்றை நடிகை ஜோதிகா பகிர்ந்துள்ளார்.

சூர்யா - ஜோதிகா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வளம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் 'பூவெல்லாம் கேட்டுப்பார்' என்ற படத்தில் நடிகை ஜோதிகாவுடன் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது.

எங்க வீட்டில் அந்த ரூல் இருக்கு; தினமும் இப்படித்தான் நடக்குது - போட்டுடைத்த ஜோதிகா! | Actress Jyothika About The Rule In Her Family

இதனையடுத்து கடந்த 2006-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த நட்சத்திர தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். தற்போது இருவரும் படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். இந்நிலையில்நேர்காணல் ஒன்றில் பேசிய ஜோதிகா தங்கள் வீட்டைப் பற்றிய சுவாரஸ்ய விஷயம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

10th படிக்கும்போதே அந்த விஷயம் நடந்துச்சு; ஸ்கூல்ல எல்லாரும் பார்த்து.. கேப்ரில்லா குமுறல்!

10th படிக்கும்போதே அந்த விஷயம் நடந்துச்சு; ஸ்கூல்ல எல்லாரும் பார்த்து.. கேப்ரில்லா குமுறல்!

அந்த ரூல்

அதில் "கார்த்தி, சூர்யா படப்பிடிப்பில் பிஸியாக இருப்பார்கள். சிவக்குமார் அப்பா ஸ்பீச் கொடுப்பதில் பிஸியாக இருப்பார். எங்க வீட்டில் ஒரு ரூல் இருக்கிறது. மதிய உணவும், இரவு டின்னரும் எல்லோரும் சேர்ந்து சாப்பிட வேண்டும் என்பது தான் அந்த ரூல்.

எங்க வீட்டில் அந்த ரூல் இருக்கு; தினமும் இப்படித்தான் நடக்குது - போட்டுடைத்த ஜோதிகா! | Actress Jyothika About The Rule In Her Family

இதனால் அந்த இரண்டு நேரமும் ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம். இப்படி இருந்தால் தான், பாசம் நீடிக்கும் என்று மாமா எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார். அதை ப்ரேக் பண்ணா அவ்வளவு தான் " என்று தெரிவித்துள்ளார்.