சூர்யாவும் நானும் பிரிந்துவிட்டோம்? உண்மையை உடைத்த நடிகை ஜோதிகா!
சூர்யாவை பிரிந்துவிட்டாரா என்ற கேள்விக்கு நடிகை ஜோதிகா பதிலளித்துள்ளார்.
நடிகை ஜோதிகா
தமிழ் சினிமாவின் மிக பிரபலாமான காதல் ஜோடி என்றால் அது சூரிய ஜோதிகா தான். இவர்கள் குழந்தைகளின் படிப்பு காரணமாக நடிகர்கள் சூர்யா, ஜோதிகா இருவரும் மும்பையில் வசித்து வருகின்றனர். அண்மையில் இருவருமே பிரிந்து வாழ்ந்து வருவதாக செய்திகள் பரவி வருகிறது.

ஏனெனில், ஓட்டு போடுவதற்காக சூர்யா குடும்பத்தோடு வந்தபோது ஜோதிகா மட்டும் வரவில்லை. அந்த நேரத்தில் அவர் இமயமலை பயணம் சென்றிருந்தார் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து இருவர் இடையே கருத்த வேறுபாடு நிலவுவதால் சுமுக உறவு இல்லை என கூறப்பட்டது. இதனையடுத்து, நடிக ஜோதிகா இன்று செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
பிரிந்திவிட்டோம்?
அப்போது அவரிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “நானும் இதுபோன்ற செய்திகளை கேள்விப்படுகிறேன். ஆனால், அது உண்மையில்லை. குழந்தைகளின் படிப்பு, எங்களின் படங்கள் என பிஸியாக இருக்கிறோமே தவிர நாங்கள் வெவ்வேறு இடங்களில் இருப்பதற்கு வேறு காரணங்கள் இல்லை” என்று கூறினார்.

தற்போது, ஜோதிகா நடிப்பில் ஸ்ரீகாந்த் என்ற திரைப்படம் சில நாட்களில் வெளியாக உள்ளது. இதற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தான் ஜோதிகா பங்கேற்றார். அப்போது நிபுணர் ஒருவர் ஜோதிகாவிடம், மூகப் பொறுப்பு பற்றி பேசும் நீங்களே ஏன் வாக்களிக்க வரவில்லை என்று கேட்டார்.
அதற்கு, அப்போது எதிர்பாராத விதமாக ஊரில் இருக்கமுடியாமல் போய்விட்டது என்பதால் என்னால் வாக்களிக்க நேரில் வரமுடியவில்லை இவ்வாறு கூறியுள்ளார்.இதை தொடர்ந்து, அரசியலுக்கு வரும் என்னம் உள்ளதா என்ற கேள்விக்கு, நிச்சயம் இல்லை. மேலும், திருமணம் ஆகிவிட்டாலும் பெண்கள் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.
பொறுப்பு துறப்பு ; ஜோதிகாவின் விவாகரத்து செய்தி முற்றிலும் சமூக வலைத்தளங்களில் வெளிவந்த தகவலே, இதற்கும் IBC பக்கத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.
You May Like This Video
உயர்கல்வி வாய்ப்புகளை தவறவிட்ட மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்! அரசாங்கத்தின் புதிய திட்டம் IBC Tamil
பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நாய்கள் IBC Tamil