உங்க வீட்டு பொண்ண அப்படி சொல்வீங்களா?அப்படி பண்ணாதீங்க - லிவிங்ஸ்டன் மகள் வேதனை!
நடிகை ஜோவிதா பிலிப் லிவிங்ஸ்டன் நெகட்டிவ் கமெண்டுகள் குறித்து பேசியுள்ளார்
நடிகை ஜோவிதா
பிரபல தமிழ் தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'அருவி' என்ற சீரியலில் நடித்து வருகிறார் ஜோவிதா பிலிப் லிவிங்ஸ்டன். இவர் பிரபல தமிழ் நடிகரான லிவிங்ஸ்டனின் மகள் ஆவார்.
இதற்கு முன் 'பூவே உனக்காக' என்ற சீரியலில் நடித்துள்ளார். மாடலிங்கும் செய்துவரும் ஜோவிதா அடிக்கடி போட்டோஷூட் செய்து புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அண்மையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு ஜோவிதா பேட்டியளித்திருந்தார். அதில் தனக்கு வரும் நெகட்டிவ் கமெண்டுகள் குறித்து பேசியுள்ளார்.
பேட்டி
ஜோவிதா பேசுகையில் "உங்களுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் விட்டுவிட வேண்டும். ஏன் எனது பதிவுகளுக்கு கீழ் மனசை கஷ்ட்டப்படுத்துவது போல் நெகட்டிவ் கமெண்டுகளை பதிவிடுகிறீர்கள். அப்படி செய்யாதீர்கள். உங்கள் வீட்டில் இருப்பவர்களிடம் நீங்கள் அப்படி சொல்வீர்களா.
ஒரு முறை உங்கள் அம்மாவையும், சகோதரியையும் நினைத்து பார்த்தல், அப்படி செய்ய உங்களுக்கு தோனாது. நாங்களும் மனிதர்கள் தான் . உங்களுக்கு என்னை பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள். அடுத்தவர்களை கஷ்ட்டப்படுத்தாதீர்கள்" என்று ஜோவிதா பேசியுள்ளார்.