தனியாக ரூமுக்கு அழைத்த தயாரிப்பாளர் - சின்னத்திரை நடிகை பகீர் புகார்!
சின்னத்திரை நடிகை, தயாரிப்பாளர் மீது பாலியல் புகாரளித்துள்ளார்.
நடிகை ஜெனிபர்
பாலிவுட்டில் க்ராஸி 4, ஏர் லிஃப்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து அறிமுகமானவர் நடிகை ஜெனிபர் மிஸ்ட்ரி பன்சிவால். தொடர்ந்து, தொலைக்காட்சி தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
'தாரக் மேத்தா கா ஊல்தா சாஷ்மா' ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், அந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார். தொடர்ந்து, அவர் அளித்துள்ள பேட்டியில், "ஒருமுறை அசித் குமார் மோடி என்னிடம் என்ன குடிக்கிறீர்கள் என்று கேட்டார்.
பாலியல் புகார்
அதற்கு நான் தைரியமாக விஸ்கி என்று சொன்னேன். இதற்குப் பிறகு, தன்னுடன் விஸ்கி குடிக்க வருமாறு பலமுறை கேட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு எங்கள் படக்குழு முழுவதும் சிங்கப்பூர் சென்றோம்.
அந்த பயணத்தின் போது, தயாரிப்பாளர் விஸ்கி குடிக்க அவர் அறைக்கு வரச் சொன்னார். இதை கேட்டவுடன் நான் அதிர்ந்து போனேன். பிறகு ஒரு நாள் கழித்து, ‘நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். நான் உன்னைப் பிடித்து முத்தமிட விரும்புகிறேன்' என்றார்.
இதைக் கேட்ட நான் பயத்தில் நடுங்கினேன். மேலும் ஒருமுறை ‘உங்களுக்கு இரவில் ரூம் பார்ட்னர் இல்லையென்றால் என் அறைக்கு வந்து விஸ்கி குடியுங்கள் என கூப்பிட்டார்" எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால் தயாரிப்பாளர் இந்த குற்றச்சாட்டை மறுத்தது குறிப்பிடத்தக்கது.