அட்ஜஸ்ட்மென்ட்; ரூமில் இயக்குநர் முதல் ஹீரோ வரை வரிசையா.. அவ்ளோ வலி - ஜீவிதா வேதனை!
தான் சந்தித்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை நடிகை ஜீவிதா குறித்து பேசியுள்ளார்.
நடிகை ஜீவிதா
டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் ஜீவிதா. பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் என்ற சீரியலில் நடித்து பிரபலமானார். பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து சினிமாவிலும் அறிமுகமானார்.
தற்போது அருவி என்ற சீரியலில் நடித்து வருகிறார். ஜீவிதா கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் தான் சந்தித்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது "நிறைய விஷயத்தில் அட்ஜஸ்ட்மென்ட் கேட்ருக்காங்க. அவரின் பெயரை சொல்ல நான் விரும்பல. அந்த படத்துல நீங்கதான் செகண்ட் லீடு, ஆனால் சில அடஜஸ்ட்மெண்ட்ஸ் இருக்கும்னு சொன்னாங்க.
அழுகை வந்தது..
நானும் அவர்கிட்ட, டிரஸ் விஷயத்துல அட்ஜஸ்ட் பண்ணணுமான்னு ஓப்பனா கேட்டேன். அப்போ அவர் சொன்னாரு "இல்லம்மா.. நான் முதலில் ரூமுக்கு வருவேன். நான் முடிச்சதும் கேமராமேன் வருவாரு.
அது முடிச்சதும் அப்பறம் ப்ரொட்யூஸர் வருவாரு. கடைசியா ஹீரோ வருவாரு" அப்படீன்னு சொன்னாரு. நான் அவரை ஷாக்கா பாத்துட்டு என்னால முடியாதுனு சொல்லிட்டேன். இந்த விஷயம் இன்னும் என்னை பாதிச்சிட்டு இருக்கு.
அப்போ எனக்கு அழுகை மட்டும்தான் வந்தது. ஆனால் அந்த இடத்துல அழுதிருந்தா.. நான் தோத்துட்டதா அர்த்தம். எனக்கு தோக்குறதுக்கு பிடிக்காது. எனக்கு அவ்வளவு வலிச்சது" என்று ஜீவிதா உருக்கமாக பேசியுள்ளார்.