பிரபல பாஜக நடிகை சரணடைய நீதிமன்றம் உத்தரவு - பரபரப்பு!
நடிகை ஜெயப்பிரதா சரணடைய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயப்பிரதா
70 மற்றும் 80களில் தவிர்க்க முடியாத முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தவர் நடிகை ஜெயப்பிரதா. பல மொழியில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும் 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை உத்தரப் பிரதேச மாநிலம், ராம்பூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.
சரணடைய உத்தரவு
இந்நிலையில், இவர் நடத்தி வந்த திரையரங்கில் பணி புரிந்த தொழிலாளர்களுக்கான ஈஎஸ்ஐ பணத்தை அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என தொழிலாளர்கள் புகார் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயப்பிரதா மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் ஜெயப்பிரதா ரூ.20 லட்சம் டெபாசிட் செய்வும், 15 நாட்களில் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடையவும் உத்தரவிட்டுள்ளது.