உங்களிடம் 'அது' குறைவாக இருக்கிறது என்று ரிஜெக்ட் செய்தார்கள் - நடிகை இவானா வேதனை!
இவானா
இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளிவந்த நாச்சியார் என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரை உலகில் அறிமுகமானவர் இவானா. அந்த படத்தில் சிறப்பாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த 'லவ் டுடே' என்ற படத்தில் நடித்து இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார்.

தற்போது தோனி என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரிப்பில் வெளிவந்த LGM என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார்.இந்நிலையில் அண்மையில் பிரபல யூடியூப் சானெல் ஒன்றுக்கு இவானா பேட்டியளித்திருந்தார்.
அப்போது அவரிடம் 'ஏதாவது திரைப்படம் கம்மிட்டாகி பின்னர் நீங்கள் பார்ப்பதற்கு சிறிய பெண் போல் உள்ளீர்கள் மற்றும் உயரம் குறித்து பேசி உங்களை ரிஜெக்ட் செய்திருக்கிறார்களா என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
இவானா பேட்டி
அப்போது பேசிய இவானா 'அப்படி நிறையா இருக்கிறது. முன்னாடி எல்லாம் எனக்கு அது மிகவும் மன வேதனையாக இருந்தது. உடல் தோற்றம் வைத்து ஏன் அப்படி கூறுகிறார்கள்? என்று எனக்கு ஒரு எண்ணம் இருந்தது.

அதனால் நான் பல நாள் சோகமடைந்துள்ளேன் . நமக்கு ஒரு நல்ல படத்தில் வாய்ப்பு வந்துவிட்டது இந்த படத்தை நாம் நடிக்க போகிறோம் என்று எல்லாம் தயார் ஆனதிற்கு பிறகு 'உங்கள் உயரம் குறைவாக உள்ளது, அதனால் நீங்கள் வேண்டாம்' என்று கூறி என்னை ரிஜெக்ட் செய்திருக்கிறார்கள்.
ஆனால் இப்போது நான் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. ஏனெனில் நான் இப்படித்தான் இருக்கிறேன், என்னால் அது மாற்ற முடியாது என்று இவனா பேசியுள்ளார்.
எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை IBC Tamil
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil