அந்தமாதிரி இருக்காதுனு சொல்லுவாங்க.. எனக்கு அது வரலையே - ஓப்பனாக சொன்ன இவானா!
ஆபாசப்படங்கள் பார்ப்பது குறித்து நடிகை இவானா பேசியுள்ளார்.
நடிகை இவானா
இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான 'நாச்சியார்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரை உலகில் அறிமுகமானவர் நடிகை இவானா. அந்த படத்தில் சிறப்பாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்த 'லவ் டுடே' என்ற படத்தில் நடித்து இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும், தோனி என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரிப்பில் வெளிவந்த LGM என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார்.
பேட்டி
சமீபத்தில் இவரது நடிப்பில் மதிமாறன் என்ற படம் வெளியாகியிருந்தது. இவானா கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில், ஆபாசப்படங்கள் பார்ப்பது குறித்து பேசியிருந்தார்.
அவர் பேசியதாவது "அதை பார்த்தீர்கள் என்றால் அந்த மாதிரி இருக்காது என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் ஆபாசப்படங்கள் பார்ப்பதற்கு இதுவரை எனக்கு இன்ட்ரெஸ்ட் வரவில்லை.
இப்போது நான் சாதாரண படங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆபாசப்படங்கள் அந்த பக்கம்.. நான் இந்த பக்கம்" என்று கூறியுள்ளார்.