போட்டோல பெருசா.. ஆனா நேர்ல மட்டும்.. அந்த மாதிரியான கேள்வியால் கடுப்பான லவ் டுடே இவானா!
நடிகை இவானா தன்னிடம் அதிகம் கேட்கப்படும் கேள்வி குறித்து பேசியுள்ளார்.
நடிகை இவானா
இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளிவந்த நாச்சியார் என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரை உலகில் அறிமுகமானவர் இவானா. அந்த படத்தில் சிறப்பாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த 'லவ் டுடே' என்ற படத்தில் நடித்து இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது தோனி என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரிப்பில் வெளிவந்த LGM என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார். சமீபத்தில் யூடியூப் சானெல் ஒன்றுக்கு நடிகை இவனா பேட்டியளித்திருந்தார். இதில் 'எந்த நடிகருடன் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று உங்களுக்கு ஆசை என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இவானா பேட்டி
அதற்கு பதிலளித்த நடிகை இவானா 'எனக்கு மலையாள நடிகர் மோகன்லாலுடன் நடிக்க வேண்டும், தமிழில் விஜய்யுடன் நடிக்க ஆசை என்றும் கூறியுள்ளார். மேலும் நீங்கள் நிறைய நேர்காணல் கொடுத்திருப்பீர்கள்.
அதில் உங்களிடம் கேட்கப்படும் கேள்விகளில், திரும்ப திரும்ப இதே கேள்வியா.. என்று நீங்கள் எரிச்சலாக நினைக்கும் கேள்வி எது? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த இவானா 'போட்டோல பாக்கும்போது பெருசா இருக்கீங்கா, நேர்ல பாக்கும்போது குட்டியா இருக்கீங்க என்று திரும்ப திரும்ப அந்த கேள்வியை என்னிடம் கேட்பார்கள் என்று பதிலளித்துள்ளார்.