வயிற்றில் குழந்தையுடன் குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடும் பிரபல நடிகை- வைரல் வீடியோ

actressishwaryaprabhakar iceprabakar babybumpvideo heroinviralvideo happywomensday
By Petchi Avudaiappan Mar 09, 2022 09:16 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நிறைமாத கர்ப்பிணியாக சீரியல் நடிகை ஐஸ்வர்யா டான்ஸ் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் குடும்பம் ,மகாபாரதம், சந்திரலேகா, பைரவி ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமான் நடிகை ஐஸ்வர்யா விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார்

. குறிப்பாக ஜோடி நம்பர் 1 சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடனமாடினார். மங்களூரை சார்ந்த இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். எப்போதும் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா மகளிர் தினத்தை முன்னிட்டு கர்ப்பகால பெண்கள் ஆரோக்கியம் குறித்து பதிவிட்டுள்ளார்.

அதில்   இந்த வீடியோவை பார்க்கும் போது நீங்கள் கொடுக்கும் அதிர்ச்சி/ஆச்சரியமான எதிர்வினையை என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது. காரணம், நம் அனைவருக்கும் கர்ப்பம் பற்றிய சொந்த கருத்துகள் உள்ளன. நான் என் வாழ்நாள் முழுவதும் ஒரு நடனக் கலைஞராக இருந்தேன், நான் கர்ப்பமாக இருக்கும் போது மிகவும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தேன்.

எனவே எனது மருத்துவரின் ஆலோசனையை நான் தொடர்ந்து நடனமாடினேன் என ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.