18 வயதில் அதற்காக அழைத்தார்; அந்த உச்ச நடிகர் சொன்னது.. - விஜய் பட நடிகை பகீர்!

Vijay Isha Koppikar Tamil Cinema Tamil Actors Tamil Actress
By Jiyath Jun 22, 2024 11:34 AM GMT
Report

அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து நடிகை இஷா கோபிகர் பேசியுள்ளார்.

இஷா கோபிகர்

கடந்த 1998-ம் ஆண்டு வெளியான காதல் கவிதை என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இஷா கோபிகர். தொடர்ந்து அரவிந்த் சுவாமியுடன் என் சுவாச காற்றே, விஜய்யுடன் நெஞ்சினிலே, விஜயகாந்துடன் நரசிம்மா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

18 வயதில் அதற்காக அழைத்தார்; அந்த உச்ச நடிகர் சொன்னது.. - விஜய் பட நடிகை பகீர்! | Actress Isha Gopikar About Adjustment Issue

இந்நிலையில் இஷா கோபிகர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது "நான் 18 வயதாக இருக்கும்போதே ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்தார். 

வசூல் மன்னன் விஜய் - முதல் படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

வசூல் மன்னன் விஜய் - முதல் படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

மறுத்துவிட்டேன்

அதேபோல் மேனேஜர்கள் என்னை தவறான முறையில் தொட்டு, நடிகர்களுடன் நட்பாக இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். மேலும், உச்சத்தில் இருந்த ஒரு ஹீரோ என்னை தனியாக சந்திக்கும்படி கூறினார். எனது ஓட்டுநரோ அல்லது வேறு யாரும் என்னுடன் இருக்கக்கூடாது என்று கூறினார்.

18 வயதில் அதற்காக அழைத்தார்; அந்த உச்ச நடிகர் சொன்னது.. - விஜய் பட நடிகை பகீர்! | Actress Isha Gopikar About Adjustment Issue

ஏனெனில் எனக்கும் சில நடிகைகளுடன் தொடர்பு இருப்பதாக வதந்திகள் பரவுகின்றன. எனவே நாம் இருவரும் சந்திப்பதை வேறு யாரும் பார்க்கக்கூடாது என்றும் கூறினார். அவரது நோக்கம் எனக்கு புரிந்துவிட்டதால் சந்திக்க மறுத்துவிட்டேன்" என்று வேதனை தெரிவித்துள்ளார்.