பிகில் பட நடிகை இந்துஜாவா இது? ரசிகர்கள் வியப்பு!! இதோ புகைப்படங்கள்!
நடிகை இந்துஜா, தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை இந்துஜா, ‘மேயாத மான்’படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தில் கிடைத்த நல்ல வரவேற்பையடுத்து மெர்குரி, பில்லா பாண்டி, பூமராங் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

பின்னர் விஜய்யின் ‘பிகில்’ படத்தில் சிங்கப்பெண்ணாக நடித்து பொதுமக்கள் மத்தியில் நல்ல இடத்தை பெற்றார். இதையடுத்து ஆர்.ஜே.பாலாஜி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.
இந்த படமும் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிக்கும் ‘காக்கி’ படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதுமட்டுமல்லாமல் சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இந்துஜா, கவர்ச்சி குறையாமல் பல போட்டோஷூட்டுகளை எடுத்து அவ்வபோது இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகை இந்துஜா, தனது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடியுள்ளார். அப்போது நெருங்கிய நண்பர்களுடன் இணைந்து கேக் வெட்டி மகிழ்ந்துள்ளார். இந்த அழகிய தருணங்களின் புகைப்படங்களை தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.