திருமணமே இன்னும் ஆகல - கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த பிரபல நடிகை!
நடிகை இலியானா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.
இலியானா
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை இலியானா. இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தமிழ் சினிமாவில் ‘கேடி’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'நண்பன்' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஆண்ட்ரூ என்பவரை காதலித்து வந்தார். அவருடன் லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்துவிட்டார்.
கர்ப்பம்
தொடர்ந்து, நடிகை கத்ரீனா கைஃபின் சகோதரர் செபாஸ்டியனை காதலிக்க வருவதாக கிசுகிசுக்கப்பட்டார். இந்நிலையில், நடிகை இலியானா இன்ஸ்டாகிராமில் 2 புகைப்படங்களை பதிவிட்டு, அதில் ஒன்றில் குட்டிக் குழந்தையின் டீசர்ட்டில் சாதனைப் பயணம் ஆரம்பமாகிவிட்டது என கேப்ஷன் கொடுக்கப்பட்டு இருந்தது.

மற்றொரு புகைப்படத்தில் மம்மா என்கிற செயினை கழுத்தில் அணிந்தபடி இருக்கிறார் இலியானா.மேலும் அந்த பதிவில் விரைவில் வரவுள்ள என்னுடைய குட்டி டார்லிங்கை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் அவர் கர்ப்பமாக இருக்கலாம் என தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து அவருக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan
இந்திய தலைநகரை உலுக்கிய கார் வெடிப்பு..! நேரில் கண்டவரின் வாக்குமூலம்: அதிர்ச்சியில் மோடி அரசு IBC Tamil