7 வருடங்களுக்குப் பின் தமிழுக்கு வரும் பிரபல நடிகை - மகிழ்ச்சியில் ரசிகர்கள்
sundarc
actresshoneyrose
பட்டாம்பூச்சி
By Petchi Avudaiappan
பிரபல மலையாள நடிகை ஹனிரோஸ் 7 வருடங்களுக்குப் பின் மீண்டும் தமிழில் நடிக்கவுள்ளார்.
பாய் ப்ரெண்ட் மலையாளப் படத்தில் அறிமுகமான ஹனி ரோஸ் தமிழில் முதல் கனவே, சிங்கம்புலி, மல்லுக்கட்டு உள்பட சில படங்களில் நடித்தார். அவர் நடித்த தமிழ்ப் படங்கள் பெரிதும் வெற்றிப் பெறாத காரணத்தால் மலையாள சினிமாவில் கவனம் செலுத்தி முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார்.
இந்நிலையில் சுமார் 7 வருடங்களுக்குப் பின் பட்டாம்பூச்சி என்ற தமிழ் த்ரில்லர் படத்தில் சுந்தர் சி. ஜோடியாக ஹனிரோஸ் நடித்துள்ளார்.80களில் நடக்கும் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் விஜயலட்சுமி என்ற பத்திரிகையாளராக அவர் நடித்துள்ளார். இந்த படத்தை நீண்ட இடைவெளிக்குப் பின் பத்ரி இயக்கியுள்ளார்.