நைட் கதவ தட்டுவாங்க; பாக்க கூடாத தெல்லாம் பாத்துட்டேன்.. நடிகை ஹாசினி வேதனை!

Serials Tamil TV Serials Tamil Actress Actress
By Jiyath Nov 14, 2023 03:30 PM GMT
Report

சீரியல் நடிகை ஹாசினி தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார்.   

நடிகை ஹாசினி

ஆர்ஜே-வாக தனது பயணத்தை தொடங்கியவர் கருணா விலாசினி. இவர் சின்ன திரையில் ஹாசினி என்ற பெயரில் அறியப்படுகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாவம் கணேசன் என்ற சீரியல் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.

நைட் கதவ தட்டுவாங்க; பாக்க கூடாத தெல்லாம் பாத்துட்டேன்.. நடிகை ஹாசினி வேதனை! | Actress Hasini About Bitter Experiences In Life

இந்நிலையில் தனது வாழ்க்கையில் நடந்த காப்பான அனுபவங்கள் குறித்து பேட்டி ஒன்றில் ஹாசினி பேசியுள்ளார். அவர் பேசியதாவது "திருமண வாழ்க்கையில் நான் ஏமாந்து விட்டேன் என் கணவர் எனக்கு மட்டுமில்லாமல் என் குடும்பத்திற்கும் தொல்லை கொடுத்தார்.

திருமணத்திற்கு பிறகு தான் அவரின் பல மோசடி வேலை எனக்கு தெரிய வந்தது. பல பெண்களுடனும் அவருக்கு தொடர்பு இருக்கு. 29 வயசு பெண் பார்க்க கூடாத எல்லாவற்றையும் நான் பார்த்துவிட்டேன்.

கசப்பான அனுபவம்

நைட் 2 மணிக்கு சிலர் வந்து கதவை தட்டி உங்க கணவருக்கு இந்த மாதிரி பிரச்சனை என்று கூறுவார்கள். சுத்தமா ஒன்னுமே புரியாது என்ன பிரச்சனை என்று பார்ப்பதற்குள் அடுத்த பிரச்சனை வந்து இருக்கும்.

நைட் கதவ தட்டுவாங்க; பாக்க கூடாத தெல்லாம் பாத்துட்டேன்.. நடிகை ஹாசினி வேதனை! | Actress Hasini About Bitter Experiences In Life

கடவுளிடம் கதறி அழுது வேண்டுவேன், என்னை இந்த பிரச்சனையிலிருந்து வெளியே கொண்டு வா என்று. தினம் தினம் இப்படியே நடந்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் என்ன செய்வது என்றே தெரியவில்லை.

அப்போதுதான் பிரச்சனை நான் இல்லை, என் கணவர் தான் என்பதை புரிந்து கொண்டு அவரைவிட்டு வெளியில் வந்தேன். 2014ம் ஆண்டு ஆரம்பித்த பிரச்சனையில் கேட்காத பேச்சு இல்லை, படாத கஷ்டம் இல்லை, பார்க்காத வழக்கறிஞர் இல்ல, இழக்காத நண்பர்கள் இல்லை" என்று ஹாசினி தனது சோகத்தை குறித்து பேசியுள்ளார்.