காருக்குள் நட்சத்திர தம்பதி; 20 பேர் கொண்ட கும்பல் செய்த காரியம் - அதிர்ச்சி சம்பவம்!

Karnataka India Bengaluru Crime
By Jiyath Apr 21, 2024 02:26 AM GMT
Report

நட்சத்திர தம்பதி மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நட்சத்திர தம்பதி 

கன்னட திரையுலகில் முன்னணி இளம் நடிகையாக இருப்பவர் ஹர்ஷிகா பூனச்சா. இவரது கணவர் புவன் என்பவரும் நடிகர் ஆவார். இந்த நட்சத்திர தம்பதி பெங்களூருவில் உள்ள ஒரு ஓட்டலுக்கு இரவில் உணவருந்த சென்றனர்.

காருக்குள் நட்சத்திர தம்பதி; 20 பேர் கொண்ட கும்பல் செய்த காரியம் - அதிர்ச்சி சம்பவம்! | Actress Harshika Spouse Complaint Of Assault

அவர்கள் உணவருந்திவிட்டு புறப்படுவதற்காக காருக்கு வந்தபோது 2 பேர் தம்பதியிடம் தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் தம்பதியினரை தாக்கியதாக கூறப்படுகிறது.

பள்ளியில் வைத்தே வீடியோவில் சிக்கிய ஆசிரியை - ஆத்திரத்தில் செய்த காரியம்!

பள்ளியில் வைத்தே வீடியோவில் சிக்கிய ஆசிரியை - ஆத்திரத்தில் செய்த காரியம்!

தாக்குதல் 

இதுதொடர்பாக நடிகை ஹர்ஷிகா பூனச்சா மற்றும் அவரது கணவர் புவன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

காருக்குள் நட்சத்திர தம்பதி; 20 பேர் கொண்ட கும்பல் செய்த காரியம் - அதிர்ச்சி சம்பவம்! | Actress Harshika Spouse Complaint Of Assault

இதுகுறித்து நடிகர்கள் பூனச்சாவும்-புவன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசியதாவது "ஓட்டலுக்கு சாப்பிட காரில் சென்றோம். சாப்பிட்டுவிட்டு காரை எடுக்க வந்தபோது எங்களை 2 பேர் தாக்கினர். அவர்களுடன் 20 பேர் சேர்ந்து எங்கள் மீது தாக்குதல் நடத்தினர்" என்று தெரிவித்துள்ளனர்.