ஆபாச பட விவகாரம்: ரூ.15 லட்சத்துக்கு டீல் பேசியதாக போலீசார் மீது நடிகை புகார்
ஆபாச பட விவகாரம் தொடர்பாக தன்னை கைது செய்யாமல் விடுவிக்க மும்பை போலீசார் பேரம் பேசியதாக நடிகை கெஹனா வசிஸ்த் கூறியிருப்பதை பாலிவுட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஆபாச படங்களை தயாரித்ததாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கடந்த ஜூலை 16ம் தேதி மும்பை குற்றப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது தயாரிப்பில் வெளியான சில ஆபாச படங்களில் தன்னை கட்டாயப்படுத்தி ராஜ் குந்த்ரா நடிக்க வைத்ததாக நடிகை கெஹனா வசிஸ்த் தெரிவித்த புகார் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஏற்கனேவே கெஹனா வசிஸ்த் 87 ஆபாச படங்களில் நடித்துள்ளதாக கடந்த பிப்ரவரி மாதம் மும்பை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு சுமார் 4 மாதம் சிறைத் தண்டனை அனுபவித்து பின்னர் ஜாமினில் விடுதலை ஆனார். ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்ட நிலையில், மீண்டும் விசாரணை வளையத்திற்குள் அவர் சிக்கி உள்ளார்.
இந்நிலையில் ஆபாச பட விவகாரம் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் தன்னை கைது செய்வதற்கு முன்னதாக போலீசார் தன்னிடம் டீல் பேசியதாக கெஹனா வசிஸ்த் குற்றம் சாட்டியுள்ளார்.
மும்பை போலீசார் தன்னை இந்த விவகாரத்தில் இருந்து விடுவிக்க 15 லட்சம் ரூபாயை லஞ்சமாக கேட்டனர் என்றும், பணம் கொடுக்க மறுத்த நிலையில், எப்படியாவது உன்னை இந்த விவகாரத்தில் சிக்க வைத்து கைது செய்வோம் என மிரட்டினர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.