இப்போலாம் புரொடியூசர்ஸ் ஓப்பனா கேட்குறாங்க... பிரபல நடிகை வேதனை!
தற்போதை தயாரிப்பாளர்கள் எல்லாவற்றையும் ஓப்பனாக கேட்பதாக நடிகை காயத்ரி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
காயத்ரி ரேமா
தமிழில், பேயிருக்க பயமேன், ரீ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகை காயத்ரி ரேமா. சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தனக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். அதில், தயாரிப்பாளர்களை நடிகைகள் மதிப்பதில்லை என்று பேசினார்கள்.
எனக்கு அந்த கால படப்பிடிப்பு பற்றி தெரியாது. அந்த காலத்தில், தயாரிப்பாளர்கள் ஹீரோயின்களிடம் வெளிப்படையாக எதுவும் கேட்டிருக்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் வேலையை மட்டும் செய்திருப்பார்கள். பணம் கொடுத்து ஒரு முதலாளியாக சரியாக நடந்திருப்பார்கள். ஆனால்,
மரியாதை இல்லை
இன்று இருக்கும் தயாரிப்பாளர்கள் அப்படி இல்லை. எல்லாவற்றையும் ஓப்பனாக கேட்கிறார்கள். எடுத்ததும் தயாரிப்பாளர் இப்படி கேட்கிறாரே என நினைக்கும் போது, அவர்களிடம் மரியாதை வராது. இவ்வளவு பெரிய இடத்தில் இருப்பவர், இப்படி கேட்கிறாரே என்று தான் தோன்றும்.
அதிலும், நாங்கள் பார்க்கும் பெரும்பாலான தயாரிப்பாளர்கள், எங்கள் அப்பா வயது அல்ல, எங்கள் தாத்தா வயதில் இருக்கிறார்கள். அவர்கள் இப்படி கேட்கும் போது, மனதில் இருந்து மரியாதை சென்று விடும். அந்த வயதில் இருக்கும் ஒருவர், நம்மிடம் ரோட்டில் கேட்டாலே கோபம் வரும், இவ்வளவு பெரிய ஆள் கேட்கும் போது எப்படி இருக்கும்?
எப்படி சார்?
இந்த வயசுல ஏன் இப்படி கேட்குறாரு. என்று அவர் மீதான மரியாதை குறைந்துவிடுகிறது. முன்பு முதலாளி என்று தயாரிப்பாளர்கள் கவுரமாக நடந்து கொண்டார்கள்; இன்று இப்படி இல்லை. அப்படி இருக்கும் போது, எல்லாவற்றிக்கு ஹீரோயினை தப்பு சொன்ன எப்படி சார்? என மனதிற்கள் யோசித்துக் கொண்டிருந்தனர்.
நான்கு முறை, தயாரிப்பாளர்கள் பேச்சோட நிற்காமல், நேரடியாக உடலில் கை வைத்து, ஆசைக்கு அழைத்தார்கள். அப்போது, அவர்களை நான் தள்ளிவிட்டேன். ‛சார் நான் அதுக்கு வரலை. என்னை மன்னித்து விடுங்கள் என, அங்கிருந்து சென்றிருக்கிறேன். இது தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல, நடிகர்களிடத்திலும் இது நடந்துள்ளது.
வேதனை
பல இயக்குனர்கள் அவர்களின் ஆசைக்கு அழைத்து, அதை நான் மறுத்ததால், எனக்கு பல வாய்ப்புகள் பறிபோயிருக்கிறது. இப்படி ஒரு நிலை எடுத்து தான், இந்த துறையில் தொடர வேண்டும் என்று நான் விரும்பவில்லை. பல துறைகளில் இந்த நிலை இருக்கிறது. அதற்காக நாம் இந்த துறையை விட்டு போகக்கூடாது என்று தான் பயணிக்கிறேன்.
பயந்து ஒதுங்க ஆரம்பித்தால், புதியவர்கள் யாருமே சினிமாவுக்கு வரமாட்டார்கள். இந்த பிரச்னைகள் இருப்பதை வெளியில் சொன்னால் தான், இதெல்லாம் மாறும் என நம்புகிறேன் என வேதனை தெரிவித்துள்ளார்.