இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் நடிகை காயத்ரி ரகுராம்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னை அதிமுக-வில் இணைத்துக் கொண்டார் நடிகை காயத்ரி ரகுராம்.
காயத்ரி ரகுராம்
பிரபல நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜக-வில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனையடுத்து பாஜகவுக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டு வந்த அவர், பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.
நன்றி மறக்க கூடாது
இந்நிலையில் காயத்ரி ரகுராம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னை அதிமுக-வில் இணைத்துக் கொண்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் "என் குடும்பத்தினர் எப்போதும் அதிமுக-வினர் தான், நன்றியை மறக்க கூடாது என்பதற்காக அதிமுக-வில் இணைந்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.